சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் - பலி எண்ணிக்கை 97ஆக உயர்வு - Seithipunal
Seithipunal


சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் பலி எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆர்.எஸ்.எப் எனப்படும் தனிப்பட்ட துணை ராணுவ விரைவுபடையை ராணுவத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவம், ராணுவ படைகளுக்கு எதிராக மொதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சூடான் தலைநகர் கார்ட்டூம், டார்பூர், மெரோ உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான மோதல்களும், குண்டு வெடிப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோரின் எண்ணிக்கை இந்தியர் ஒருவர், ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் சூடானில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

97 killed clash between army and paramilitary forces in sudan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->