லெபனான் மீதான வான்வழி தாக்குதல்!...24 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா  மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று மதியம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் குறிப்பாக பால்பெக் மற்றும் பெகா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள  நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

மேலும், பெய்ரூட் நகரின் வடக்கே பெயில் பகுதியில் உள்ள ஆல்மேட் நகரம் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air attack on lebanon israel killed 24 people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->