மேலாளர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான் நிறுவனம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் கடந்த சில காலமாகவே ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கவும், லாபத்தை மேம்படுத்தவும் எண்ணியுள்ள இந்த நிறுவனம் தற்போது 14000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 2.1 பில்லியன் முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்கும் நோக்கத்தில் இந்தாண்டு 14,000 மேலாளர் பதவிகளை நீக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த பதவி நீக்கம் அமேசான் நிறுவனத்தின் உலகளாவிய மேலாளர் பதவிகளில் 13% ஆகும். அதாவது உலகளவில் நிர்வாகப் பணியாளர்களை 105,770 இலிருந்து 91,936 ஆக குறைக்க அமேசான் முடிவெடுத்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் இந்த வேலை குறைப்பு அமேசான் வலை சேவைகள், சில்லறை விற்பனை செயல்பாடுகள் மற்றும் மனித வளங்கள் உள்ளிட்ட பிரிவுகளைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காலத்தில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amezon company decide 14000 employees lay off


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->