பெரும் அச்சம்.. பூமிக்கு பேரழிவை தரும் விண்கல்.. 26 கி.மீ வேகத்துடன் பூமியை நோக்கி பயணம்.!
aostroid travel to earth
நாசா விஞ்ஞானிகள் பூமியின் மீது மோதி பாதிப்பை தரக்கூடிய 100 அடி விட்டம் கொண்ட ஒரு பெரிய விண்கல்லை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விண்கல்லுக்கு யூ.என்.5 என்று பேரிடப்பட்டுள்ளது. இது மணிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் நமது பூமியை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இது பூமியின் வட்டப்பாதைக்கு எட்டு கிலோ மீட்டர் வேகத்தில் சரியாக பத்து முப்பது மணிக்கு கடந்து செல்லும் என்று தெரிவித்தனர்.
விண்கற்கள் விண்வெயில் சுற்றி திரியும் போது, அவை பூமியின் மீது உரசி பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் திசை திருப்ப நாசா முயற்சித்து அந்த விண்கற்களை விண்வெளியிலேயே மோதி வெற்றி கண்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.