மூத்தக் குடிமக்களுக்கு ரெயில்களில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்.!
aravind kejriwal write letter to pm modi for concessions to senior ctizens in train
மூத்தக் குடிமக்களுக்கு ரெயில்களில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்.!
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா பரவலை தொடர்ந்து ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், இந்த சலுகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டணச் சலுகையை மூத்தக் குடிமக்களுக்கு மீண்டும் அளிக்குமாறு பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்தது. இருப்பினும், ரெயில்வே இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- "மத்திய அரசு ரூ.45 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது.
இதில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளித்தால் ரூ.1,600 கோடி மட்டும் தான் செலவாகும். இந்த கட்டணத் தொகையை செலவழிப்பதால், அரசு ஒன்றும் ஏழை ஆகிவிடாது.
நாட்டில் கட்டண சலுகையை நிறுத்தியதால், மூத்த குடிமக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற எண்ணம் தான் உருவாகும். மூத்த குடிமக்களின் ஆசி இல்லாமல், எந்த நாடும், எந்தவொரு தனிமனிதரும் முன்னேற முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
aravind kejriwal write letter to pm modi for concessions to senior ctizens in train