விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள்!
Argentina sports club roof collapses
அர்ஜென்டினா பஹியா பிளாங்காவில் இன்று ஏற்பட்ட புயலால் அங்குள்ள விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் இந்த பகுதியில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பஹியா பிளாங்காவை தாக்கிய கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூறை இடிந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடுபாடுகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Argentina sports club roof collapses