35 ஆண்டுகளுக்குப் பிறகு அபாரம்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!
Awesome after 35 years. West Indies beat Pakistan at home
டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இதற்கு முன்பு 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.இந்தநிலையில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும், பாகிஸ்தான் 154 ரன்களும் அடித்தன.
பின்னர் 9 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 254 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஷான் மசூத் மற்றும் முகமது ஹுரைரா தலா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய பாபர் அசாம் தனது பங்குக்கு 31 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, 44 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இதற்கு முன்பு 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Awesome after 35 years. West Indies beat Pakistan at home