பங்களாதேஷ் வீரருக்கு மாரடைப்பு; போட்டியின் போது மைதானத்தில் நெஞ்சுவலி..! - Seithipunal
Seithipunal


பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. டாக்கா பிரிமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மொகமதான் ஸ்போர்டிங் கிளப் மற்றும் ஷைன்புகுர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதிய போட்டியில் போது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

மொகமதான் அணியின் தலைவராக இருந்த தமீம், முதலில் ஒரு ஓவர் மட்டுமே களத்தில் இருந்தார். அதன் பின்னர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். KPJ ஸ்பெஷலைஸ்ட் வைத்தியசாலை மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவருக்கு மேலும் சோதனைகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளனர்.

உலங்கு வானூர்தி மூலம் மற்றொரு மருத்துவமனைக்குச் செல்ல தமீம் இப்பால் திட்டமிட்டிருந்தார். ஆனால், நிலைமை மோசமானதால், மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மீண்டும் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரின் இருதய வழிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமீம்க்கு உடனடியாக ஆன்ஜியோபிளாஸ்டி மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அவசரக் கூட்டத்தை ரத்து செய்தது. BCB தலைவர் பரூக் அகமது உட்பட பலர் மருத்துவமனையில் தமீமை பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladesh player suffers heart attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->