சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் பாய்ட் டன்லப் பிறந்ததினம்!
Birthday of John Boyd Dunlop, who revolutionized road transport
வாகன டயர் கண்டுபிடிப்பாளர் திரு.ஜான் பாய்ட் டன்லப் அவர்கள் பிறந்ததினம் இன்று .
வாகன டயர் கண்டுபிடிப்பாளரான ஜான் பாய்ட் டன்லப் 1840ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் ஒரு கால்நடை மருத்துவர் ஆவார்.
குதிரைகள் கரடு முரடான சாலைகளில், கெட்டியான ரப்பரால் தயாரிக்கப்பட்ட கழுத்துப் பட்டையுடன் மிகவும் கனமான சுமைகளை கஷ்டப்பட்டு இழுத்து வருவதைப் பார்த்தார். அவற்றின் கஷ்டத்தை குறைக்க காற்று அடைக்கப்பட்ட குஷன்களை அதற்கு பதிலாக பயன்படுத்த முடியுமா என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.

அதே சமயத்தில் 1887ஆம் ஆண்டு அவருடைய மகன் தன் சைக்கிளை கற்கள் நிறைந்த சாலையில் கஷ்டம் இல்லாமல் ஓட்டுவதற்கு வழி கேட்டான். இவரும் மகனுக்கு உதவ முடியுமா என்று சோதனையில் இறங்கிவிட்டார்.
தோட்டத்தில் இருந்த பழைய குழாயை வெட்டி ட்யூப் தயாரித்து அதில் காற்றை நிரப்பி சைக்கிளின் பின்பக்கச் சக்கரத்தோடு இணைத்தார். சைக்கிள் ஓட்டுவதற்கு எளிதாக இருந்தது.
அதை மேம்படுத்தி 1888ஆம் ஆண்டு பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். ஏற்கனவே 1845ஆம் ஆண்டிலேயே ராபர்ட் தாம்சன் இதைக் கண்டுபிடித்திருந்தார். பிரபலமாகாததால் அது தெரியாமல் போய்விட்டது.

ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த வில்லியம் ஹியூம் என்ற தொழிலதிபர் இவருடன் சேர்ந்து டன்லப் என்ற டயர் நிறுவனத்தை உருவாக்கினார்கள்.
பல தொழிற்சாலைகள் உருவாவதற்கு காரணமாக இருந்து சாலைப் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஜான் பாய்ட் டன்லப் 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி அன்று
தனது 81வது வயதில் மறைந்தார்.
English Summary
Birthday of John Boyd Dunlop, who revolutionized road transport