போட்டிக் களத்தில் மயங்கி விழுந்த குத்துச் சண்டை வீரர் பலி..!
boxing player died in kana
கானாவில் போட்டியின் போது குத்துச் சண்டை வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக ஆரம்பமான இந்த மோதலின் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக தாக்கிக்கொண்டு இருந்தனர். அப்போது, நைஜீரிய வீரர் கேப்ரியல் வலிப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்ததில் வீரர் களத்திலேயே உயிரிழந்தார். குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கிய வீரர் களத்திலேயே உயிரிழந்த நிகழ்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boxing player died in kana