வெவ்வேறு இடங்களை குறிவைத்து கொடூர தாக்குதல்!...இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனானில் 32 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா  மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, லெபனானில் இஸ்ரேல் நடத்திய வெவ்வேறு வான்வழி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

பால்ச்மே நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும்  சோப் மாவட்டம், தெற்கு டெபாஹ்தா, டயர் மாவட்டத்தில் உள்ள மன்சூரி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில்  32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brutal attack targeting different places israel attack in lebanon killed 32 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->