ஜப்பானில் குழந்தை பிறப்பு 4.9 சதவீதமாக குறைவு.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மிகக் குறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் குறைவு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, குழந்தை பிறப்புகளை ஊக்குவிப்பதற்கு கர்ப்பம், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான மானியங்களை உயர்த்துவது உளிட்ட பல்வேறு விரிவான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்த பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், குறைந்த பிறப்பு விகிதம், மக்கள்தொகை வீழ்ச்சி போன்றவை ஜப்பானின் தேசிய வலிமையை சிதைக்கும் காரணிகளாக இருப்பதாக கூறி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு கடந்த வாரம் பிரதமர் புமியோ கிஷிடாவிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

childrens birth percentage down in jappan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->