வணிக வளாகத்தில் திடீர் ''தீ விபத்து'' 16 பேர் உயிரிழப்பு! சீனாவில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு சீனா சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜிகோங் நகரில் உள்ள உயர் தொழில் நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறியும் தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடிதத்தில் சிக்கியிருந்த சுமார் 75 பேரை மீட்டனர். இதனை தொடர்ந்து இந்த தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 16 பேரரசு உடலையும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணையில், கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பொதுவாக உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்திற்கு மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்களில் ஏற்படும் பழுது காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் உள்ள வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த உள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China fire accident 16 people died 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->