அமெரிக்க பிரதிநிதிகள் வருகைக்கு எதிர்ப்பு.! தைவான் மூத்த அதிகாரிகள் 7 பேருக்கு பொருளாதார தடை விதித்தது சீனா - Seithipunal
Seithipunal


சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி வருகை மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு, தைவான் அதிபரை சந்தித்தது சீனாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

மேலும் தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர் பயிற்சி துவங்கியுள்ளதால் இரு நாடுகளுக்களுக்கிடையே போர்பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான தைவான் பிரதிநிதி, தைவான் துணை சபாநாயகர் சாய் சி சாங், தைவான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் வெலிங்டன் கூ உள்ளிட்ட 7 மூத்த அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மேலும் தடை விதிக்கப்பட்டவர்கள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல முடியாது என்றும், அவர்களுடன் தொடர்புடைய எந்த நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் சீனாவில் வணிகம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சீனா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China impose sanctions on 7 Taiwan individuals


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->