காலநிலை மாற்றம் : ஆல்ப்ஸ் மலைத்தொடரில் 51.5 சதவிகித பனிமலைகள் உருகி அழிந்தது.!
Climate change 51 percent of the glaciers in the Alps have melted
காலநிலை மாற்றங்களினால் சூழலியல் பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகி மறைந்து வருவது தற்போது தீவிரமடைந்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக மறைந்துவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் கூட்டு வன நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கடந்த 80 ஆண்டுகளில் 51.5 சதவிகித பனிமலைகள் உருகியுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், புவி வெப்பமயமாதலினால் ஒவ்வொரு ஆண்டும் 0.73 கனசதுர கிலோமீட்டர் பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 12 சதவிகித பனிப்பாறைகள் உருகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பனி உருகுதல் விகிதம் முந்தைய நிலைகளைக் காட்டிலும் தொடர்ந்து வேகமெடுத்து வருவதாகவும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக ஆல்ப்ஸ் மலைகளில் பனிகள் உருகவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Climate change 51 percent of the glaciers in the Alps have melted