பல ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால்மீன்.!
comet approaching to earth after fifteen thousand years
ஐம்பதாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி கண்டுபிடித்துள்ளது.
பூமியை சுற்றுவட்ட பாதையில் வரும் இந்த வால்மீன் கடந்த ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்த வால்மீன் பூமிக்கு மிகவும் அருகில் நெருங்கி வருகின்றது.
கடந்த 12-ஆம் தேதி சூரியனில் இருந்து பெரிகோலினை கடந்து பூமி வட்டபாதையில் செல்லும் இந்த வால் நட்சத்திரம் அடுத்த மாதம் 1-ந்தேதி பூமிக்கு மிக அருகே நெருங்கி வரும். இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
இது தொடர்பாக நாசாவின் கூற்றுப்படி, "ஜனவரி மாதம் பிற்பகுதியில் விடியற்காலையில் வடக்கு அரைக்கோளத்தில், பச்சை வால் நட்சத்திரம் தென்படும். இந்த வால் நட்சத்திரத்தை பார்ப்பதற்கான கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பு ஜனவரி 30 ஆகும்.
இந்த வால்மீன், போலரிஸ் மற்றும் நார்த் ஸ்டாரின் முடிவிற்கு இடையில் தெரியும். அதன் பின்னர், இந்த வால்மீன் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில், தெற்கு அரைக்கோளத்தில் தெரியும்" என்று நாசா தெரிவித்துள்ளது.
English Summary
comet approaching to earth after fifteen thousand years