ஆண்டிற்கு 1500 நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடு எது தெரியுமா?...இன்று ரிக்டரில் 5.7 ஆக பதிவு! - Seithipunal
Seithipunal


ஜப்பான் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் குஷிரோ கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,  ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கமானது 60 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். இருந்த போதிலும் வானிலை மையம் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதற்கிடையே  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை ஜப்பான் எதிர்கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  இதில், பெரும்பாலானவை சிறிய அளவில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுவதாக வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ஜப்பானின் இசு தீவுகளுக்கு அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know which country has 1500 earthquakes per year today it registered 5.7 on the richter scale


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->