மெக்சிகோ, கனடா பொருட்கள் மீதான வரிவிதிப்பை ஒத்திவைத்துள்ள டொனால்ட் டிரம்ப்..!
Donald Trump postpones tariffs on Mexican Canadian goods until April 2
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் அறிவித்து இருந்தார்.
குறித்த வரிவிதிப்பு நடவடிக்கை பிப்ரவரி 04-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது. இதயன் பிறகு குறித்த வரிவிதிப்பு நடவடிக்கையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அந்தவகையில்; கடந்த 04-ந்தேதி மெக்சிகோ மற்றும் கனடா பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை அமலுக்கு வந்தது. அத்துடன், நேற்று முன்தினம், கார் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரிவிதிப்பு நடவடிக்கை ஏப்ரல் 02-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பான நிர்வாக கோப்புகளில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Donald Trump postpones tariffs on Mexican Canadian goods until April 2