ஜப்பானில் திடீர் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்.!
earthquake in jappan
நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.
அவ்வாறு ஏற்படும் நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை சிறியவை. மேலும், மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு பொதுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த எச்சரிக்கையால், தீவில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.