பிலிப்பைன்சில் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு.!
Earthquake in Phillipines
பிலிப்பைன்சில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு பிலிப்பைன்சில் உள்ள ககாயன் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.40 மணி அளவில் தலுபிரி தீவில் இருந்து தென்கிழக்கு 27 கிலோமீட்டர் தொலைவிலும், 27 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 வாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் லூசோன் தீவில் உள்ள அபாயோ, இலோகோஸ் சுர் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Earthquake in Phillipines