ரஷியாவில் அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள் - ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு.!
earthquake in rasia
ரஷியா நாட்டின் கிழக்கு கம்சட்கா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும், 50 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து லேசான நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதையறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்தில பாதிப்புகளை ஆய்வுசெய்து வருகின்றனர். இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சம் அடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.