அமேசான் நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பின்னர் இவர் ட்விட்டர் நிறுவனத்தில் அதிக மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பணிபுரியும் 7,500 ஊழியர்களில் சுமார் நான்காயிரம் பேரை பணியில் இருந்து நீக்கினார். 

டுவிட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் 13 சதவீதம் பணியாளர்களில், சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில், டுவிட்டர் மற்றும் முகநூலைத் தொடர்ந்து, உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 3 சதவீதம் அதாவது, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது. 

இதுகுறித்து அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவித்ததாவது, "செலவினங்களை குறைப்பதற்காக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளதனால், அந்த குறிப்பிட்ட பொறுப்புகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நிறுவனத்திற்குள்ளேயே வேறு துறைகளுக்கு விண்ணப்பித்து இடம் மாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

employers dismiss start in ameson company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->