மாஸ்கோவில் சோகம் - சுரங்க பாதையை சுற்றி பார்க்க வந்த பயணிகள் - பிணமாக மீட்பு.!
four touristers died in masco
மாஸ்கோவில் சோகம் - சுரங்க பாதையை சுற்றி பார்க்க வந்த பயணிகள் - பிணமாக மீட்பு.!
மாஸ்கோ நகரத்தில் பல சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளை கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அவற்றில் சில சுரங்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன.
இதன் காரணமாகவே, சுற்றுலா பயணிகள் சுரங்கங்களை சுற்றிப் பார்ப்பதற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில், மாஸ்கோவில் கழிவுநீர் அமைப்பின் சுரங்கப்பாதையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 பேர் தண்ணீரில் அடித்துச்சென்று உயிரிழந்தனர்.
இதில், ஒரு பெண்ணின் உடல் உட்பட மூன்று பேரின் சடலங்கள் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, மோஸ்க்வா ஆற்றில் மேலும் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நகர்ப்புற ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாவது, "சுரங்கப்பாதையில் மக்கள் தப்பிக்கக்கூடிய தங்குமிடங்கள் இருக்கிறது. ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றுத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சுற்றுப்பயணத்தின் அமைப்பாளர் மீது சட்ட அமலாக்கப் பிரிவு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலாவின் பொது நன்கு பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four touristers died in masco