ஓராண்டு நிறைவு: ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜி7 நாடுகள் முடிவு..!!
G7 countries decided to impose more sanctions on Russia
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி தற்போது ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, போரால் பாதிப்படைந்த உக்ரைன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நகரங்களின் உள்கட்ட அமைப்புகளை சீரமைக்கவும் 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.
மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 மாநாட்டை நடத்த முடிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து போர் நிறைவடைந்து ஓராண்டையொட்டி ஜப்பான் பிரதமர் தலைமையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு காணொளி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்பொழுது மாநாட்டில், போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும், ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜி7 நாட்டின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் சர்வதேச சமூகம் ஒன்று கூடி ஒற்றுமையை வெளிப்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
English Summary
G7 countries decided to impose more sanctions on Russia