கனடாவில் காந்தி சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..!
Gandhi statue vandalised by kalistan supporters in Canada
காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இந்து கோவில்களை சிதைத்து, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது உலக நாடுகளில் வாழும் இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்தில் ஹாமில்டன் நகரில் கனடா அரசுக்கு நன்கொடையாக இந்தியா வழங்கிய காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் வெளியிட்ட தகவலில், 6 அடி உயரத்தில் வெண்கலத்தால் ஆன காந்தி சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் காந்தியின் தடியில் காலிஸ்தானின் கொடி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை சிலையின் அடிப்பகுதியில் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஹாமில்டன் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Gandhi statue vandalised by kalistan supporters in Canada