விண்கலத்தில் எரிவாயு கசிவு.. சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கலா..?! - Seithipunal
Seithipunal



சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள ஸ்டார் லைனர் விண்கலத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் தற்போது பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த மே 5 ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சர்வதேச விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோருடன் புறப்பட்டுச் சென்றது.

சுமார் 25 மணி நேர பயணத்திற்கு பின்னர் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது அந்த விண்வெளி மையத்துடன் பொருத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அந்த ஸ்டார் லைனர் விண்கலத்தை ஆய்வு செய்த போது அதில் நிரப்பட்டுள்ள ஹீலியம் எரிவாயு கசிவது கண்டறியப் பட்டுள்ளது.

மேலும் விண்கலத்தை இயக்கும் த்ரஸ்டர் எனப்படும் 5 கருவிகளும் பழுதாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை நாசா பொறியாளர்கள் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. 

முன்னதாக அவர்கள் இருவரும் கடந்த ஜூன் 14ம் தேதி பூமி திரும்புவதாக அறிவிக்கப் பட்டது. பின்னர் அது ஜூன் 26ம் தேதிக்கு மாற்றப் பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் ஜூலை 2ம் தேதிக்கு பிறகு பூமி திரும்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப் படும் என்று நாசா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gas Leak in Star Liner Space Ship Sunita Williams Return Delaying


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->