துருக்கி-சிரியா மக்களுக்கு 3 மாத அவசர விசா - ஜெர்மனி அறிவிப்பு
Germany to issue emergency visas to Turkey Syria earthquake victims
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெர்மனி 3 மாத அவசர விசா வழங்க உள்ளது.
துருக்கி-சிரியாவின் எல்லை நகரங்களில் கடந்த திங்கட்கிழமை 6ஆம் தேதி அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இடுப்பாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 80,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதில் துருக்கியில் மட்டும் 24,617 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பேரிடர் நிவாரண படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் செய்தியாளர்களிடம், ஜெர்மனியில் உள்ள துருக்கி மற்றும் சிரியா குடும்பங்கள் பேரிடர் பகுதியில் இருந்து தங்கள் நெருங்கிய உறவினர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வர அனுமதிக்க விரும்புகிறோம் என்றும், இது அவசரகால உதவி என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Germany to issue emergency visas to Turkey Syria earthquake victims