பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் புதிய கார் வாங்க தடை.. நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் குறைந்துவரும் அந்நிய செலவாணி கையிருப்பு, அதிகரித்துவரும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் மற்றும் டாலருக்கு நிகரான பண மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், அரசு பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிப்பதாகவும், அரசு ஊழியர்கள் புதிய கார்கள் வாங்குவதற்கு தடை விதிப்பதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஜூலையில் தொடங்கும் 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிடவுள்ள நிலையில், பணக்காரர்களுக்கான வரிகளை அதிகரிப்பதாகவும், கார்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாகவும், அரசு அதிகாரிகள் புதிய கார்கள் வாங்க தடை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறித்து நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கி விட்டோம் என்றும் ஆனால் கடினமான முடிவுகளை எடுப்பதில் இது முடிவல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government employees banned from buying new cars in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->