திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்.. தெறித்து ஓடிய பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ.!
Helicopter crashed in America Miami Beach
அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரையில் வானத்தில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் பயத்தில் தெறித்து ஓடினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மியாமி கடற்கரை போலீசார் ஹெலிகாப்டரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஹெலிகாப்டர் தண்ணீரில் விழுந்ததால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் தரையில் விழுந்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Helicopter crashed in America Miami Beach