ஒருபோதும் கனடா மக்களை கைவிட மாட்டேன்..ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்! - Seithipunal
Seithipunal


கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார் . இதையடுத்து இது கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். முன்னதாக  லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார். இந்தநிலையில் கனடாவின் புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளது.

ஆனால் தற்போது கனடாவின் இடைக்கால பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், பதவி விலகுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உருக்கமாக பேசினார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது;-"பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடா மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக உழைத்தேன் என்றும்  மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளேன் என கூறினார் . மேலும் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்றும் எனது தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி நாட்களில் கூட, நான் கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை கூற விரும்புகிறேன்."இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will never abandon Canadians. Justin Trudeau!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->