துப்பாக்கிச்சூடு சண்டை: அப்பாவி பொதுமக்கள் உள்பட 21 பேர் பலி
Including 3 civilians 21 died in Somalia shooting between army and terrorist
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஆளும் சோமாலிய கூட்டாட்சி அரசை ஜிஹாதி போராளிகள், அல்-ஷபாப் அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல்-ஷபாப், சோமாலியா ராணுவத்தின் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அல்-ஷபாப் கைப்பற்றிய 3 கிராம பகுதிகளை சோமாலியா ராணுவம் தாக்குதல் நடத்தி அப்பகுதியை மீட்டுள்ளது. இதற்கு பதிலடியாக சோமாலியாவின் மசகவே கல்கடூட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மசகவே நகரின் மூன்று பெரியவர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சோமாலியா ராணுவம் பயங்கரவாதிகள் மீது நடத்திய எதிர் தாக்குதலில் பயங்கரவாதிகள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலையடுத்து மசகவே நகரை சுற்றியுள்ள பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Including 3 civilians 21 died in Somalia shooting between army and terrorist