ஆஸ்திரேலியா : இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அங்குள்ள கோவில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிராக வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது. 

முதலில், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலிலும், மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவிலிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த செயலுக்கு, அந்த நாட்டிலுள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, நேற்று கான்பராவில் உள்ள இந்திய துாதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "இந்துக் கோவில்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. வெளியில் இருந்து வந்த உத்தரவுகளின்படி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதியுள்ளனர். இந்த செயல் மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளில் நடத்தப்பட்டுள்ளது. பல மொழி, பல கலாச்சாரம் இருப்பினும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்கின்றனர்.

இதுதான் இந்தியாவின் அடிப்படை பாரம்பரியம் ஆகும். இந்த பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள் தொடராமல் இருப்பதற்கு, ஆஸ்திரேலியா அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india condemns for three hindhu temples attack in austreliya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->