உக்ரைனுக்கு மனித நேயம் சார்ந்த உதவிகள் வழங்கி வருவது தொடரும்.! ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி.!
India will continue its humanitarian assistance to ukraine
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக நடந்து வரும் நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் .மேலும் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்று உக்ரைன் அதிபர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவின் ஐ.நா நிரந்தர பிரதிநிதியான ருச்சிரா கம்போஜ் கலந்து கொண்டு உரையாடினார். இதில் உக்ரைன் போரில் மனிதநேயம் அடிப்படையிலான, விசயங்களை மையப்படுத்திய இந்தியாவின் அணுகுமுறை தொடரும்.
மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்பின் முடிவானது, சர்வதேச சட்டம், ஐ.நா. அமைப்பு மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மதிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று நாங்கள் உறுதியுடன் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்தியா, பொருளாதாரம் மற்றும் மனித நேயம் கடந்த உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வருவதோடு, தென்பகுதியில் உள்ள சில அண்டை நாடுகளுக்கும் இந்தியா பொருளாதார உதவிகளை அளித்து வருகிறது என்று ருச்சிரா கம்போஜ் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
India will continue its humanitarian assistance to ukraine