வரலாற்றில் இன்று... மின்சாரத்தின் தந்தை பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


'மின்சாரத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

காந்தவியல்-மின்சாரவியல் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகளின் மூலம் நிரூபித்த மேதை மைக்கேல் ஃபாரடே. இவர் மின்காந்த தூண்டலைக் கண்டுபிடித்தவர். கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார்.

உலகிலேயே அதிகபட்ச பரிசோதனைகள் செய்து பார்த்த அறிவியல் அறிஞர் என்று போற்றப்படும் இவர் 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மறைந்தார்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்தார்.

1539ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக் தேவ் மறைந்தார்.

புற்றுநோய் ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டை சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸ் என்ற பெண் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் தன்னை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்து அவர்களுக்கு மனஉறுதியை அளித்து வந்தார். எனவே அவர் இறந்த தினத்தை புற்றுநோய் ரோஜா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக கார் இல்லாத தினம் (car free day) ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் விதத்திலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும், மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தினம் 1995ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Inventor of electricity Michel Faraday birthday today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->