லெபனான் மீதான இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!...57 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா  மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கிழக்கு லெபனான் பகுதியில் உள்ள ஹெர்மல்  கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதில், 117 பணய கைதிகளை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel air attack on lebanon 57 people killed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->