பள்ளிக்கூடம் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்!...காஸாவில் 16 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், காசாமுனையின் மத்திய பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக  பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளியில் போரால் வீடுகளை இழந்த மக்கள் முகாமிட்டு தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel cruel attack on the school 16 people died in gaza


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->