ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது. 

சுமார் 46 நாட்களாக நடந்த இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த வெள்ளிக்கிழமை 4 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நான்கு நாட்கள் 50 பிணை கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். 

அதே சமயத்தில் இஸ்ரேல் தங்கள் நாட்டின் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

அதன்படி பிணை கைதிகளும் பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 10:30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார். 

இதனால் எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

4 நாட்களுக்கு பின்னர் ஒவ்வொரு 10 இணை கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Hamas ceasefire further extension


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->