பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை யாரும் மறந்து விடவில்லை - பாகிஸ்தானை சாடிய அமைச்சர் ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாத தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், பன்னாட்டு அமைப்புகளின் சீர்திருத்தம் மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான இரு முக்கிய நிகழ்வுகள் இந்தியா தலைமையின் கீழ் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் குறித்த விவாதம் வாஷிங்டனில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளரிடம் இந்தியாவில் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

அப்பொழுது விவாதத்தின் போது இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை நன்றாக பயன்படுத்தியதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹினா ரபானி ஹர் கருத்து தெரிவித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் ஹினா ரபானி பேசியதை நான் கவனித்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்ததை நான் நினைவு கூற விரும்புகிறேன். முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பாகிஸ்தான் பயணத்தின் போது, உங்கள் வீட்டிற்கு பின்னால் பாம்புகள் இருந்தால் அது அண்டை வீட்டை மட்டும் கடிக்கும் என்று நினைக்கக் கூடாது, தங்கள் மக்களையும் கடிக்கும் என்று தெரிவித்திருந்தார். 

மேலும் சிறந்த அறிவுரைகளை பாகிஸ்தானில் எப்பொழுதும் விரும்பாது என்றும், உலகம் பாகிஸ்தானை பயங்கரவாத மையமாக பார்க்கிறது. பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்று யாரும் மறந்து விடவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaishankar indicate Pakistan as no one forget where terrorism comes from


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->