நிலவை ஆராயப் போகும் ஜப்பானின் ரோபோட்..!! வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..!! - Seithipunal
Seithipunal


நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஜப்பானின் டோக்கியோ நகரத்தைச் சேர்ந்த "ஐ ஸ்பேஸ்" என்ற தனியார் நிறுவனத்தின் லேண்டர் கருவியும் இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு அமீரக நாட்டைச் சேர்ந்த ரோவர் கருவியும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த இரு கருவிகளும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வாயிலாக அமெரிக்காவின் கேப் கனாவரெல் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் நேற்று ஏவப்பட்டுள்ளது.

எரிபொருள் சிக்கனம் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லேண்டர் கருவி பூமியிலிருந்து 16 லட்சம் கிலோமீட்டர் தூரம் சென்று நிலவில் இறங்கி அடுத்த 5 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதேபோன்று நாசாவின் சோதனை விண்கலம் 5 நாட்களில் நிலவை அடைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரோவர் கருவிக்கு துபாய் அரச குடும்பத்தின் பெயரான ரஷீத் என்ற பெயர் சூட்டப்பட்டது. சுமார் 10 கிலோ எடையுள்ள இந்த ரோவர் கருவி நிலவில் இறங்கி 10 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளும். ஜப்பானின் லேண்டர் கருவியில் இணைக்கப்பட்டுள்ள ரோபோ நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan lander device successfully launched to the moon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->