புதின் தவறாக நினைத்துவிட்டார்.. நாங்கள் தயார்.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.!
joe biden announce we are ready
7-வது நாளாக உக்கிரன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளது. தங்களைத் தற்காத்துக்கொள்ள உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்யப் படைகள் நெருங்கி சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வருகிறது. ஆனால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷ்யாவை எதிர்த்து இதுவரை தாக்குதல் நடத்தவில்லை.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வாதிகாரிகள் தங்களின் ஆக்கிரமிப்பு செயலுக்கு கண்டிப்பாக விலை கொடுத்தே தீர வேண்டும்.
அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர். புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்ட படாதது. மேற்குலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின். நினைத்துவிட்டார் மேலும் அவர் நம்மை நமது வீட்டிலேயே பிரித்து விடலாம் என நினைத்து விட்டார்.
புதின் தவறாக நினைத்து விட்டார். நாங்கள் தயார் என ஜோ பைடன் கூறினார். நாங்கள் தயார் என ஜோ பைடன் கூறுவ,து பொருளாதார ரீதியில் ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்கவா.? அல்லது ரஷ்யா மீது நேட்டோ அமைப்பு தாக்குதல் நடத்த உள்ளதா.? என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
English Summary
joe biden announce we are ready