காலநிலை மாற்றம்: லட்சக்கணக்கான ஆப்பிரிக்கா யானைகள் பலி.!
Lakhs of Africa elephants died due to climate change
ஆப்பிரிக்காவில் காலநிலை மாற்றத்தால் யானைகளின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, வேட்டையாடுதல், அதிக வெப்பநிலை, வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றால் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 1800-களில் 26 மில்லியனிலிருந்து 415,000 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் யானைகளைச் சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியின் காரணமாக ஆப்பிரிக்கா யானைகள் சிறு வயதிலேயே அதிகமாக உயிரிழந்துள்ளதால், இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Lakhs of Africa elephants died due to climate change