நாளை மறுநாள் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.!
Lunar eclipse on may sixteen
ஆண்டிற்கு ஒருமுறை நிகழும் சந்திர கிரகணம் நாளை மறுநாள் மே 16ஆம் தேதி நிகழவிருக்கிறது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும்பொழுது சந்திரனின் மீது சூரிய ஒளி விழாமல் புவி மறைப்பதால் ஏற்படக்கூடியதே சந்திர கிரகணமாகும்.
இந்த ஆண்டின் சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 7.02 மணியிலிருந்து மதியம் 12.20 வரை நீடிக்கும். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் சந்திர கிரகணம் இந்தியாவில் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் முழுமையாக சந்திர கிரகணத்தை காண முடியும் என்றும், பசிபிக் ,அட்லாண்டிக் இந்திய பெருங்கடல் அண்டார்டிகா உள்ளிட்ட இடங்களில் பகுதியளவு சந்திர கிரகணத்தை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Lunar eclipse on may sixteen