கிரீமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ கிடங்கில் பயங்கர வெடிவிபத்து.! அப்பகுதியிலிருந்து 2000 பேர் வெளியேற்றம்
Massive explosion at Russian military depot in Crimea
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதமாக நடந்து வருகிறது. இப்போரில் உக்ரைனின் தெற்கு பகுதியை ரஷ்யா படைகள் கிரீமியாவிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் கிரீமியாவில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் வெடி மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கிரிமியாவின் வடக்கு பகுதியில் உள்ள மின் இணைப்புகள், மின்சார துணை நிலையங்கள், ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளிலுள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள 2000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து விபத்திற்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், உக்ரைனின் தலையீடு இருக்கலாம் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைன் படைகள் சிறிய டிரோன்கள் மூலம் வெடிமருந்து கிடங்கில் குண்டு வீச பயன்படுத்தியிருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Massive explosion at Russian military depot in Crimea