பயங்கரவாதத்தை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி விட முடியாது - அமைச்சர் ஜெய்சங்கர்
Minister Jaishankar said terrorism cannot be confined to a specific area
அரசு முறை பயணமாக ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரியாவின் வெளியுறவு துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்து பேசினார்.
இதையடுத்து செக் குடியரசின் ஜன் லிபாவ்ஸ்கை மற்றும் ஸ்லோவேக்கியா வெளியுறவுதுறை அமைச்சர் ராஸ்டிஸ்லாவ் கேசர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்,
பயங்கரவாதத்தினால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் போதை பொருள், சட்டவிரோத ஆயுத விற்பனை ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருக்கும் போது சர்வதேச பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேக்கியா தலைவர்களுடன் நடந்த சந்திப்பில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகள், இந்தோ-பசிபிக் விவகாரம் மற்றும் உக்ரைன் போரினால் ஏற்பட்ட சர்வதேச விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Jaishankar said terrorism cannot be confined to a specific area