நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஆரம்ப தேதி மற்றம்.! - Seithipunal
Seithipunal


நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஆரம்ப தேதி மற்றம்.!

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என்று இரண்டு நாட்டு மக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மத்திய அரசு சார்பில் கப்பல் போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் நாகை துறைமுகத்தில் குடிவரவு துறை, சுங்க பயணிகள் சோதனை மையம், மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு என அனைத்துக்கும் தனித்தனியா அறைகள் கட்டப்பட்டுள்ளன. நாகை துறைமுகத்தில் காலை 7:30 மணிக்கு புறப்படும் இந்தக் கப்பல் மூன்று மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை அடையும். 

இந்தக் கப்பலில் ஒருவர் 50 கிலோ வரை பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இதற்கிடையே நாகை காங்கேசன் துறைமுகம் இடையிலான போக்குவரத்துக்கு கொச்சின் வடிவமைக்கப்பட்ட "சேரியா பாணி" என்ற கப்பல் நாகைக்கு வருகை தந்துள்ளது.

இலங்கை செல்ல விமான நிலையங்களில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறையும் கப்பல் பயணத்திற்கும் கடைபிடிக்கப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கப்பல் போக்குவரத்து 10ம் தேதி காலை 7.30க்கு கப்பல் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nagai to sri langa ship transport start date change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->