நாளை பூமியில் விழும் நாசாவின் செயலற்ற செயற்கைக்கோள்.! - Seithipunal
Seithipunal


1984 ஆம் ஆண்டு பூமியின் கதிரியக்க ஆற்றல் பற்றி ஆய்வு செய்வதற்கு இ.ஆர்.பி.எஸ் எனப்படும் செயற்கைக்கோள் அமெரிக்காவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் புவியின் வளிமண்டலத்தையும், ஓசோன் மண்டலத்தையும் ஆராய்ச்சி செய்தது .

பின்னர் சூரியனிலிருந்து பூமி எவ்வாறு ஆற்றலை அடைகிறது என்பதை ஆய்வு செய்தது. இந்நிலையில் 38 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த செயற்கைக்கோள், செயலிழந்தது. கடந்த 2005ஆம் ஆண்டு இதன் ஆயுட்காலம் முடிவடைந்ததும், பூமியின் வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருந்துள்ளது.

இதையடுத்து நாசா, இ.ஆர்.பி.எஸ் செயற்கைக்கோள் சுற்று பாதையில் இருந்து விலக்கப்பட்ட பின் தற்போது பூமியை நோக்கி கீழே விழ தொடங்கியுள்ளது. இது நாளை அதிகாலை 5.10 மணி அளவில் பூமியில் விழும் என நாசா தெரிவித்துள்ளது.

சுமார் 2450 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்தை அடையும் பொழுதே, முழுவதும் எரிந்து சாம்பலாக்கி விடும் என்று நாசா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA inactive satellite will fall to earth tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->