மின்கம்பத்தில் மோதிய விமானத்தால் இருளில் தவிக்கும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் மொவ்ண்ட்கொமெரி நகரில் உள்ள ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. 

இந்நிலையில், நேற்று இரவு இந்த நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது இரண்டு பேர் பயணம் செய்த சிறிய ரக விமானம் ஒன்று மோதி அந்தரத்தில் தொங்கியது. 

இதனால், மின் இணைப்பு தடைபட்டு, 1 லட்சம் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டது. இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு, மின்கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் விமானத்தில் சிக்கி தவித்த இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், விமானம் மோதியதால் மின் கம்பிகள் அறுந்து, இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near america flight accident in electric pole


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->