அமெரிக்கா || ஆறு ஊழியர்களை சுட்டுக்கொன்றபின் தற்கொலை செய்துகொண்ட மேலாளர்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் செசப்ஹு நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, திடீரென அந்த சூப்பர் மார்க்கெட் மேலாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த  ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினார். 

கடை மேலாளர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்கு பின்னங்கால் பிடரிப்பட ஓடினர்.

ஆனால், அவர்கள் மீது மேலாளர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து, மேலாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஊழியர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர். அத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்திய மேலாளரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

அதன் பின்னர், போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near america super market manager kill employers after sucide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->