பஞ்சாப் : பகல் நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து ரூ.22 லட்சம் கொள்ளையடித்த முகமூடி திருடன்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே மாநகர போலீஸ் துணை கமிஷனர், மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் உள்ளிட்டோரின் அலுவலகங்களும், கன்டோன்மென்ட் காவல்  நிலையமும் அமைந்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று இந்த வங்கியில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை ஆயுதங்களால் மிரட்டியுள்ளனர்.

அதில் ஒருவர் காசாளர் அறைக்கு சென்று கைத்துப்பாக்கியை காட்டி காசாளரை மிரட்டி, அங்கிருந்த ரூ.22 லட்சத்து 48 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு, வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான காட்சிப்பதிவில், இரண்டு கொள்ளையர்களில் ஒருவர் வங்கியின் வெளியே இருசக்கர வாகனத்தில், தயாராக நிற்பதும், மற்றொருவர் துப்பாக்கியை கையில் மறைத்து வைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிப்பது போல் உள்ளது. 

அந்த கட்சி பதிவின் படி, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, "வங்கியின் மேலாளர் அறை மற்றும் காசாளர் அறையில் அலாரம் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பொத்தான்கள் செயல்படவில்லை. அதேபோல் கொள்ளையன் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த போது யாரும் அங்குள்ள எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியையும் அழுத்தவில்லை என்றுத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, நேற்று வங்கியின் வழக்கமான காசாளர் விடுமுறையில் இருந்ததனால், தற்காலிக பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர். அவரிடம் கொள்ளையர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் அவர் பயத்தில் பணத்தை கொடுத்துள்ளார்.

மேலும், வங்கியில் செயல்படாமல் இருந்த அலார பொத்தான்களை சரி செய்ய கோரி வங்கி அதிகாரியிடம் போலீசார் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near punjap two youngmans robbery in bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->