பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு அதிக அளவு பணம் தேவை - நைஜீரியா - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக வெள்ளப்பெருக்கு மற்றும் பாலைவனமாதல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படுவதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நைஜீரியா நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் கூறும்பொழுது, பருவநிலை மாற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உலகிற்கு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது என்றும், பருவநிலை மாறுபாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுப்படுத்த வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக அளவிலான பணம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பருவநிலை மாறுபாட்டை எதிர்த்து போரிட அதிக அளவில் நிதி திரட்ட வேண்டும் என்றும், அதற்கு மாறாக பருவநிலை மாறுபாடு குறித்து மட்டும் பேசுவது பயன் தராது என்று குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் உபயோகத்தை குறைத்து பசுமை சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு நாம் மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nigeria says Developing countries need more money to tackle climate change


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->